தாளவாடி அருகே யானை தாக்கி விவசாயி பலி

தாளவாடி அருகே தோட்டத்தில் காவலுக்கு இருந்தபோது, யானை தாக்கியதில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-01-15 11:00 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதி கேர்மாளம் கிராமத்தை சேர்ந்தவர் மசனையன் (வயது 60). விவசாயி. இவர் சொந்தமான விவசாய நிலம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்நிலையில், அறுவடை செய்த மக்காச்சோளத்திற்கு காவலுக்கு இருந்தபோது, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை மசனையனை தாக்கி கொன்றது. இதுகுறித்து, தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News