அந்தியூரில் யானை தாக்கி பலியான விவசாயி: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

பர்கூரில் யானை தாக்கி பலியான விவசாயின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், அந்தியூர் எம்எல்ஏ முன்னிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

Update: 2021-12-01 14:30 GMT
பேச்சுவார்த்தையில் ஈடுபடும் எம்எல்ஏ.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே துருசனாம் பாளையத்தை சேர்ந்த விவசாயி தொட்டையன் என்கிற தொட்டமாதயைன். நேற்று இரவு தேக்க மரத்தூர் காட்டில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு பாதுகாப்பிற்கு சென்று இருந்தவர் நள்ளிரவு யானை தாக்கி பலியானார்.அவரது உறவினர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் தட்டகரை வனத்துறையினர், பர்கூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தொட்டையன் உடலை, மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வந்தனர்.

பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் ஒப்படைக்கப்பட இருந்த நிலையில், அவரது உறவினர்கள் அவருக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், இனிவரும் காலங்களில் வனத்தை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் வன விலங்குகளால் பாதிப்பு வராத வண்ணம் பாதுகாக்க வேண்டும் என கூறி, உடலை வாங்க மறுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ, இதுகுறித்து உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும், இறந்துபோன தொட்டையன் குடும்பத்திற்கு அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்படும், என்றும் தெரிவித்ததை தொடர்ந்து, அவரது உறவினர்கள் உடலை வாங்கி சென்றனர்.

Tags:    

Similar News