ஈரோடு தாளவாடி மலைப்பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை
Erode News Today - தாளவாடி மலைப்பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.;
Erode News Today - ஈரோடு மாவட்டம், தாளவாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் கடல் மட்டத்திற்கு மேல் 115 மீட்டர் உயரத்தில் மலைப்பகுதியில் உள்ளன. இந்த நிலையில் கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்டகாஜனூர், பாரதிபுரம், கெட்டவாடி, தல மலை, அருள்வாடி, திகினாரை போன்ற 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் கத்தரி வெண்டை, தக்காளி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, சின்ன வெங்காயம், முட்டைக்கோஸ், பீன்ஸ் போன்ற பயிர்களை பயிரிடுவது வழக்கம்.
இந்த கிராமப்பகுதியில் 50 ஏக்கர் பறப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். தற்போது தக்காளி அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால் இதனை வியாபாரிகள் கிலோ ஒன்று ரூ.3 முதல் ரூ.4 வரை வாங்குகின்றனர். இதனால் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மூன்று மாத பயிரான தக்காளியை பயிரிட நாற்று நடுதல் கலை எடுத்தல் உரம் ந்து என ஏக்கர் ஒன்றுக்கு 80 ஆயிரம் வரை செலவாகிறது கடந்த மூன்று மாதத்துக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ. 25 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ.3 முதல் ரூ.4 வரை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். விலை விழ்ச்சியால் தக்காளி பயிருக்கு செலவு செய்தால் அசல் தொகை கூட கிடைப்பதில்லை. எனவே பழுத்த தக்காளியை விவசாயிகள் அப்படியே செடியில் விட்டு விடுகின்றனர். இதனை ஆடு மாடுகள் தின்று செல்வதாகக் கூறுகின்றனர்.
சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம்(கிலோ):
மல்லிகை: 350/420
முல்லை: 112/140
காக்கடா: 455/500
செண்டு: 12/32
கோழி கொண்டை: 10/50
ஜாதி முல்லை: -/-
கனகாம்பரம்: 250/370
சம்பங்கி: 15
அரளி: 70
துளசி: 40
செவ்வந்தி: 180