ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் மருந்தகத்துக்கு விண்ணப்பிக்க டிச.10 வரை அவகாசம் நீட்டிப்பு

ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிச.10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-12-05 11:45 GMT

முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்.

ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிச.10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் வரும் டிச.10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் க.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த சுதந்திர தினவிழா உரையில், பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி, முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம/ டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோர் டிச.5ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என நாளிதழ்களில் அறிவித்திருந்த நிலையில் தற்போது பொதுமக்கள் நலன் கருதி டிச.10ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News