அந்தியூர் பேரூராட்சியில் இருந்து வாக்கு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு
அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டன.;
கோப்பு படம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் நாளை நடைபெறும் தேர்தலில், மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 66 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.அந்தியூர் கிழக்கு பள்ளி தவிட்டுப்பாளையம் தொடக்கப்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 6 வாக்குப்பதிவு மையங்களில் 22 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று மாலை வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளுக்கு, அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
முன்னதாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை திறக்கப்பட்டு, வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. இதைத் தொடர்ந்து அந்தந்த வாக்குச் சாவடி மையங்களில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.