ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றியை எதுவும் பாதிக்காது; அமைச்சர் முத்துசாமி

ஈவிகேஎஸ் இளங்கோவன், பல தலைவர்களுக்கு எதிராக பேசியது, வரும் இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பை பாதிக்காது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

Update: 2023-01-27 09:15 GMT

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் முத்துசாமி.

ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பல தலைவர்களுக்கு எதிராக பேசியது, வரும் இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பை பாதிக்காது என, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு திருநகர் காலனியில் தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தார். வெவ்வேறு அரசியல் சூழ்நிலைகளில் இவ்வாறான பேச்சுக்கள் இடம்பெற்றதாக அவர் கூறினார். எனவே, மக்கள் இப்போது அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். முத்துசாமிக்கு அமைச்சரவையில் 12வது இடமும், உதயநிதிக்கு 10வது இடமும் வழங்கப்பட்டது என்ற அண்ணா திமுக தலைவர் தமிழ்மகன் ஹுசைனின் நிலைப்பாடு குறித்து கேட்டதற்கு, அதைக் கேள்வி கேட்க ஹுசைனுக்கு இடமில்லை.


முதல்வர் அனைவரையும் உயர்வாக கருதி ஈரோட்டுக்கு பல திட்டங்களை வழங்கியுள்ளார் என்றார். அண்ணா திமுகவின் 111 பேர் கொண்ட தேர்தல் கமிட்டி குறித்து பதிலளிக்கையில், ஒவ்வொரு வாக்குசாவடியிலும் 15 பேர் கொண்ட குழுவைத் தவிர 31 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அமைச்சர் முத்துசாமி காலனி பகுதி 24வது வார்டில், கிருஷ்ணம்பாளையம் காலனி ஆர்.கே.டி.நகர், பம்பிங் ஸ்டேஷன், மாதவன் காடு, சிந்தன் நகர் ஆகிய பகுதிகளுக்கு வீடு வீடாகவும் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டார். அவருக்கு சென்ற இடமெல்லாம் தாரதப்பட்டை முழங்க பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.‌


வாக்கு சேகரிப்பில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தியூர் செல்வராஜ், கணேஷ் மூர்த்தி, திமுக மாநில நெசவாளர் அணி தலைவர் சச்சிதானந்தன், ஈரோடு மாநகர் மாவட்ட திமுக செயலாளர் சுப்பிரமணியன், சஞ்சய் சம்பத், மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், ஈரோடு மாநகர் திமுக பகுதி செயலாளர் நடராஜன், ராமச்சந்திரன், அக்னி சந்துரு, மாநகராட்சி கவுன்சிலர்கள் பழனிசாமி, ஜெயந்தி மற்றும் திமுக கூட்டணி சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News