ஜவுளி தொழில் நுட்ப பல்கலைக் கழகம் : திமுக முத்துசாமி உறுதி

ஜவுளி தொழில் நுட்ப பல்கலை கழகம் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மேற்கு தொகுதி தி.மு.க.வேட்பாளர் முத்துசாமி உறுதியளித்துள்ளார்.

Update: 2021-04-01 04:49 GMT

ஈரோடு மேற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் சு.முத்துசாமி , சூளை, ஈ.பி.பீ., நகர், பெரியசேமூர் பகுதியில் கூட்டணி கட்சியினருடன் உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு சேகரித்தார். பொதுமக்களிடம், வேட்பாளர் சு.முத்துசாமி பேசியதாவது:

விசைத்தறி தொழிலில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை சரி செய்ய, மத்திய அரசுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு மாநகர போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஈரோடு காளை மாட்டு சிலை பகுதியில் இருந்து சூரம்பட்டி நால் ரோடு வழியாக, பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு வழியாக பஸ் ஸ்டாண்ட் செல்ல இரு மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஈரோட்டில் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். ஈரோட்டில் இந்திய ஜவுளி தொழில் நுட்ப அறிவியல் பல்கலைக் கழகம் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோட்டில் தோல் பதப்படுத்தும் பயிற்சி மையம் அமைக்கப்படும். மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மிகவும் குறைவாக உள்ளது. சிறப்பு கவனம் செலுத்தி மேம்படுத்தப்படும்.

மாநகரின் புறநகர் பகுதியில் வசிக்கும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், வேலைக்கு செல்லும் பெண்களுக்காக காலை, மாலை நேரங்களில் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றை செயல்படுத்த, உதய சூரியன் சின்னத்தில் ஓட்டுப்போட்டு வெற்றி பெற செய்யுங்கள்.இவ்வாறு பேசினார்.

Tags:    

Similar News