கொரோனோ இல்லாத மாநிலமாக 15 தினங்களில் தமிழகம் மாறும்: அமைச்சர் பெரியகருப்பன் நம்பிக்கை

தமிழகம் இன்னும் 15 தினங்களில் கொரோனோ இல்லாத மாநிலமாக மாறும் என்று, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-10 13:07 GMT

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனை நடத்தினார்.

ஊராக வளர்ச்சித்துறை சார்பில் கொரானோ வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம்,  ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் பெரியகருப்பன், முதலவர் ஸ்டாலின் நேரடியாகவும் அதிகாரிகளுடனும் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவததால், இன்னும் 15 தினங்களில் கொரோனோ இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும் என நம்பிக்கை  ஏற்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற பகுதிகளில் கொரோனோவை கட்டுப்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் உள்ள 4000 படுக்கைகளில் 3250 படுக்கைகள் நிரம்பி உள்ளன. மீதம் 750 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றன. ஊரக பகுதிகளில் கூடுதலாக 2000 படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

தற்போது, கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் உள்ளவர்களை, மருத்துவர்கள் தேடி சென்று பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து வருவதால், நோய் கட்டுக்குள் இருந்து வருகிறது என்று, அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

Tags:    

Similar News