தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பங்குச்சந்தை அதிபர் திடீர் மாயம்

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஈரோட்டில் பங்குத்தந்தை அதிபர் ஒருவர் திடீரென மாயமாகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-09-12 09:15 GMT

பைல் படம்.

ஈரோடு பெரியசேமூர், எல்லப்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 37). இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரவிக்குமார் கடந்த ஒன்றை வருடமாக பங்குச்சந்தை நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் பங்குச்சந்தை நிறுவனத்தில் திடீர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக அவர் மனமுடைந்து காணப்பட்டார். நேற்று வழக்கம்போல் ரவிக்குமார் வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு கிளம்பி சென்றார். மதியம் வீட்டிற்கு வந்த அவர் சிறிது நேரத்தில் சாப்பிட வருகிறேன் என்று புவனேஷ்வரியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

ஆனால் மாலை வரை அவர் வீட்டுக்கு வரவில்லை. பின்னர் ரவிக்குமாருக்கு புவனேஸ்வரி போன் செய்தபோது ஸ்விட்ச் ஆப் என வந்துள்ளது. இதையடுத்து புவனேஸ்வரி கணவரை பல்வேறு இடங்களில் தேடியும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து இன்று வீரப்பன் சத்திரம் போலீஸ் நிலையத்தில் புவனேஸ்வரி புகார் செய்தார். அதில் மாயமான தனது கணவரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News