தொடர் மழை எதிரொலியாக ஈரோட்டில் காய்கறிகளின் விலை உயர்வு

ஈரோடு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதாலும், காய்கறி வரத்து குறைந்ததாலும் மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.

Update: 2021-07-18 08:45 GMT

ஈரோடு காய்கறி மார்க்கெட் (பைல் படம்)

ஈரோடு ஆர்.கே.வி ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி காய்கறி மார்க்கெட் கடந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக தற்காலிகமாக ஈரோடு வ. உ. சி பூங்கா பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் தற்காலிக மார்க்கெட் கட்டப்பட்டு செயல்பட தொடங்கியது.

இங்கு 700க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகளும், 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகளும் செயல்பட்டு வருகிறது. இரவு முழுவதும் மொத்த வியாபாரமும், காலையில் சில்லரை வியாபாரமும் நடைபெற்று வருகிறது.

இதற்காக தினமும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வ.உ.சி பூங்கா பகுதிக்கு வந்து கடைகள் அமைத்து வியாபாரம் செய்கின்றனர்.

மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு காய்கறி குறைந்த விலையில் விற்கப்படுவதால் மக்கள் கூட்டம் இங்கு எப்போதும் அதிகரித்துக் காணப்படும்.

இந்நிலையில் தற்போது மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் காய்கறி வரத்து குறைந்து விலை சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்று கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், பாவைக்காய், தக்காளி, அவரைக்காய், முள்ளங்கி விலை உட்பட பல்வேறு காய்கறிகளின் விலைகள் சற்று உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News