தனியார் டெக்ஸ்டைல் மில்லை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

தனியார் டெக்ஸ்டைல் பிராஸசிங் மில்லில் இருந்து வரும் துர்நாற்றத்தால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதாக கூறி முற்றுகை.;

Update: 2021-09-04 08:15 GMT

எஸ்.சி.எம் டெக்ஸ்டைல் பிராஸசிங் தொழிற்சாலையை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

ஈரோடு வெட்டுக்காட்டு வலசு பகுதியில் எஸ்.சி.எம் டெக்ஸ்டைல் பிராஸசிங் என்ற தனியார் ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் ஆலையிலிருந்து அதிகளவில் துர்நாற்றம் வீசுவதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் இன்று ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கும்போது, பிராசஸிங் ஆலையில் இருந்து இரவு நேரங்களில் அதிகளவு துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மூச்சு விட முடியாமல் சிரமம்படுகின்றனர. மேலும் அனைவருக்கும் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுகிறது. மேலும் இப்பிரச்சனை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் நேரடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News