தபால் ஓட்டுக்கான சீட்டு அனுப்பும் பணி துவக்கம்

தபால் ஓட்டுக்கான சீட்டுகள் பிரிக்கும் பணி தொடங்கியது.;

Update: 2021-03-26 12:00 GMT

ஈரோடு மேற்கு தொகுதியில் தபால் ஓட்டுக்கான சீட்டு பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 13 ஆயிரத்து 160 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இதனால் இவர்களுக்கு தபால் ஓட்டு போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வைத்து ஈரோடு மேற்குத் தொகுதியில் தபால் ஓட்டு போடுபவர்களுக்கான தபால் ஓட்டு சீட்டு பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது. நாளை ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 13,160 ஊழியர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற உள்ளது.

அந்தந்த தொகுதியில் பணியமர்த்தப்படும் ஊழியர்களுக்கு ஒரு பெட்டி வைக்கப்படும். அதில் அவர்கள் தபால் ஓட்டினை பதிவு செய்யலாம். அல்லது அவர்கள் தபால் மூலம் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஓட்டு போட முடியாதவர்கள் மூன்றாம் கட்டமாக தபால் மூலம் வாக்கு செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடந்த பணியை மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆர்டிஓ.வுமான சைபுதீன் பார்வையிட்டு அறிவுரை வழங்கினார். இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு தொகுதிகளிலும் தபால் ஓட்டு சீட்டு பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது.

Tags:    

Similar News