ஈரோட்டில் தேர்தல் பணியாளர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதியில் பணியாற்ற உள்ள தேர்தல் பணியாளர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி வழங்கப்பட்டது.

Update: 2021-03-27 15:15 GMT

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை சுமுகமாக நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் பொது மக்கள் வாக்களிக்கும் வகையில் 2741 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 13 ஆயிரத்து 160 பேர் தேர்தல் பணியில் அமர்த்தப்படுகின்றனர். இவர்களுக்கு மூன்று கட்ட பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஏற்கனவே இவர்களுக்கு முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு விட்டது.

இன்று 2-வது கட்டமாக தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்குப்பதிவு நாளன்று எவ்வாறு செயல்பட வேண்டும். வாக்கு பதிவு எந்திரம் பழுது ஏற்பட்டால் அதை எவ்வாறு கையாள்வது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் எவ்வாறு பணிபுரிவது போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News