ஈரோட்டில் பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகம்

ஈரோட்டில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 31 பைசாவும் டீசல் லிட்டருக்கு 17 பைசாவும் உயர்ந்து விற்பனையானது.;

Update: 2021-07-16 11:30 GMT

தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102-ஐ தாண்டி விற்பனையாகிறது. ஈரோட்டில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.49-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று மேலும் 31 பைசா உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.  

நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.94.82 -க்கு விற்பனையானது. இன்று 17 பைசா உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.94.97-க்கு விற்பனையானது. ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102-ஐ தாண்டி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மற்ற பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News