தேசிய கைத்தறி தினம் : ஈரோட்டில் சிறப்பு கைத்தறி கண்காட்சி

தேசிய கைத்தறி தினத்தையொட்டி ஈரோட்டில் கைத்தறி சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.

Update: 2021-08-07 09:45 GMT

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சுதேசி இயக்கம் 1905-ம் ஆண்டு ஆகஸ்டு 7-ந் தேதி தொடங்கப்பட்டது. உள்நாட்டுப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களை சிறப்பிக்கும் வகையிலும் 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 7-ந் தேதி தேசிய கைத்தறி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் கிருஷணனுண்ணி தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியில் கைத்தறியால் தயாரிக்கப்பட்ட பெட்ஷீட்கள், துண்டுகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், திரைச்சீலைகள், சால்வைகள், ஜமுக்காளம், சேலைகள், மேட்கள் போன்ற இரகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் அனைத்து கைத்தறி ஜவுளி இரகங்களுக்கும் தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இக்கண்காட்சியில் ஈரோடு மாவட்டத்திலுள்ள 15 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News