2.60 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்
2.60 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பில் பயிர்கடன் மற்றும் கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கு வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் கலந்து கொண்டு, கொரோனா தொற்றால் உயிரிழந்த புதியதலைமுறை தொலைக்காட்சி செய்தியாளர் சந்திரசேகரின் குடும்பத்தினருக்கு கொரோனா நிவாராண நிதியாக 10 லட்சம் ரூபாய் வழங்கினார். இதனை தொடர்ந்து கூட்டுறவுத்துறை சார்பில் 179 பேருக்கு 2.50 கோடி மதிப்பீட்டில் பயிர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதிகளை வழங்கினார். மேலும் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் 7 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை மற்றும், பெரும்பள்ளம் ஓடை ஆக்கிரமிப்பாளர்கள் 85 பேருக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதியில் தற்காலிக குடியிருப்பு ஓதுக்கீடுக்கான ஆணையை வழங்கினார்.