சிறுமிக்கு ‌பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை

6 வயது சிறுமிக்கு ‌பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.;

Update: 2021-05-10 11:40 GMT

ஈரோடு, கலைமகள் வீதியை சேர்ந்தவர் கோடீஸ்வரர். இவர் எண்ணெய் கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர்,  6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்த காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் கோடீஸ்வரரை கைது செய்தனர். இந்த வழக்கானது ஈரோடு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இன்று நடைபெற்ற இறுதிகட்ட விசாரணையில் வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட கோடீஸ்வரர் மீது புகார் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி மாலதி தீர்ப்பு வழங்கினார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 35ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

Similar News