கலைஞரா மோடியா என பார்ப்போம் : உதயநிதி ஸ்டாலின் பேச்சு
234 தொகுதிகளிலும் கலைஞர் போட்டியிடுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளதால் இத்தேர்தலில் வெல்வது கலைஞரா மோடியா என பார்ப்போம் என திமுக இளைஞர் அணித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சினார்.;
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா , ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் முத்துசாமியை ஆதரித்து திமுக இளைஞர் அணித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு சூரம்பட்டி பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின் ,
எழுச்சியான வரவேற்புக்கு நன்றி , முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தையும் , தமிழக மக்களின் மானம் மற்றும் உரிமையை மோடியிடம் அடகு வைத்துவிட்டதாகவும் , விட்டால் எடப்பாடி தமிழகத்தை விற்று விடுவார் என குற்றம் சாட்டினார்.
இதை தடுக்க திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின் அதிமுக , பாஜக வேறு வேறு கட்சிகள் கிடையாது என்றும் , இரட்டை இலைக்கு விழும் ஓட்டு பா.ஜ.க விழும் ஒட்டு என்றார்.
234 தொகுதிகளிலும் கலைஞர் போட்டியிடுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளதால் இத்தேர்தலில் வெல்வது கலைஞரா மோடியா என பார்ப்போம் என்றார்.