10ம் வகுப்பு, பிளஸ் 1 துணைத்தேர்வு ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

ஈரோடு மாவட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 துணை தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.;

Update: 2021-09-09 10:45 GMT

ஈரோடு மாவட்டத்தில், 10-ம் வகுப்பு துணைத்தேர்வு,  வரும் 16-ம் தேதி தொடங்கி, 28-ம் தேதி நிறைவடைய உள்ளது. இத்தோ்வுக்காக , மாவட்டத்தில் 6 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வினை எழுத 1,099பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதேபோல், 11-ம் வகுப்பு துணைத்தேர்வு,  வரும் 15-ம் தேதி தொடங்கி,  30-ம் தேதி நிறைவடைய உள்ளது. இத்தேர்வினை எழுத 228 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விண்ணப்ப எண், நிரந்தர பதிவெண், பிறந்த தேதியினை பதிவிட்டு, ஹால்டிக்கெட்டினை (நுழைவுச்சீட்டு) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், செய்முறைத் தேர்வு எழுத வேண்டிய தனித்தேர்வர்களுக்கு, ஹால் டிக்கெட்டில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையத்திலேயே, வரும்  13, 14-ந் தேதிகளில் செய்முறை தேர்வு நடத்தப்படும் என, அரசு தேர்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News