மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கு ஈரோட்டில் அஞ்சலி
மறைந்த நடிகர் விவேக் அவர்களின் திருவுருவப் படத்திற்கு ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.;
மறைந்த திரைப்பட நடிகரும், சமூக ஆர்வலர் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான விவேக் அவர்களின் திருவுருவப்படத்திற்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்டத்தலைவர் மக்கள்.ஜி.ராஜன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்ச்சியின் போது திரைப்பட நடிகர் விவேக் அவர்களை முதன் முதலில் கதாநாயகனாக அறிமுகம் செய்த இயக்குனர் ராம்கி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் எழிலரசன் அவர்களும் கலந்து கொண்டு திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அஞ்சலி செலுத்திய பிறகு விவேக் அவர்களின் பொதுச் சேவையை நினைவு கூறும் வகையில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.