முன்னறிவிப்பு இன்றி நகை ஏலம் போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு
முன்னறிவிப்பின்றி நகையை தனியார் நிறுவனம் விற்பனை செய்ததை கண்டித்து பைனான்ஸ் முன் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியவரால் பரபரப்பு. எற்பட்டது
ஈரோடு முத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்.இவர் தன்னுடைய குடும்ப தேவைக்காக தன்னுடைய 5.45 பவுன் தங்க நகையை ஈரோடு சூரம்பட்டி சாலையில் உள்ள தனியார் பைனான்ஸில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு அடகு வைத்துள்ளார்.
மாதம் 3 ஆயிரத்து 500 என தவறாமல் வட்டி கட்டி வந்ததுள்ளார். இந்நிலையில் இன்று நகையை திருப்புவதற்காக பைனான்ஸிற்கு வந்துள்ளார். ஆனால் பைனான்ஸ் சார்பில் தங்க நகையை ஏலத்தில் விற்று விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரஞ்சித் தனக்கு நகையை ஏலம் விடுவது குறித்து எவ்வித முன்னறிப்பு செய்தததை கண்டித்து பைனான்ஸ் நுழைவு வாயில் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.
அப்போது நகை வைத்து வாங்கியாகடனுக்காக மாதம் மாதம் வட்டி கட்டி வந்ததாகவும் ஆனால் எவ்வித முன்னறிவிப்பின்றி நகையை பைனான்ஸ் நிறுவனம் விற்பனை செய்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அரசு மருத்துவமனை போலீசார் போராட்டத்தில் ஈடுப்பட்ட ரஞ்சித் மற்றும் பைனான்ஸ் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.