பழ வியாபாரியிடம் ரூ. 35 லட்சம் பறிமுதல்

ஈரோடு வீரப்பம்பாளையம் பிரிவு அருகே பழ வியாபாரியிடம் ரூ. 35 லட்சம் பறிமுதல்

Update: 2021-03-18 07:17 GMT

சட்டமன்ற தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் பட்டுவாடா செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க பறக்கும் படை நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி இன்று வீரப்பம்பாளையம் பிரிவு அருகே நிலை கண்காணிப்புக் குழு அதிகாரி பிரபு தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர்.  அந்த வழியாக வந்த   காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அந்த காரில் ரூ.35 லட்சத்து 50 ஆயிரம் பணம் இருந்தது.

ஆனால், அந்த பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லை. பின்னர் மேற்கொண்ட  விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் நசீர் ஷேக் மூகமது பாஷா என்பதும், அவர் பழ மொத்த வியாபாரி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து நிலை கண்காணிப்புக் குழுவினர் அந்த பணத்தை கைப்பற்றி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த பணத்திற்குரிய ஆவணங்களை காட்டி பணத்தை பெற்றுச் செல்லலாம் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News