ஈரோடு மாவட்டத்தில் குறைந்த வாக்குப்பதிவு

Update: 2021-04-07 10:00 GMT

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலை விட 2.48 சதவீதம் குறைவான வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2,741 வாக்குச்சாவடியில் நடந்தது. வாக்குப்பதிவின் இறுதி நேரமான நேற்று இரவு 7 மணி முடிவின்படி, ஈரோடு கிழக்கு தொகுதியில் 66.23 சதவீதம், ஈரோடு மேற்கு தொகுதியில் 69.35சதவீதம், மொடக்குறிச்சி தொகுதியில் 75.26சதவீதம், பெருந்துறை தொகுதியில் 82.50 சதவீதம், பவானி தொகுதியில் 83.70சதவீதம், அந்தியூர் தொகுதியில் 79.74சதவீதம், கோபி தொகுதியில் 82.91சதவீதம், பவானிசாகர் தொகுதியில் 77.27சதவீதம் என 8 சட்டமன்ற தொகுதியும் சேர்த்து 76.91சதவீதம் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

இது ஒருபுறமிருக்க கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 79.39சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இதை ஒப்பிடும் போது கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் 2.48சதவீதம் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளது. இதற்கு கொரோனா அச்சுறுத்தல் ,கோடை வெயில், வெளியூர் பயணம் போன்றவை முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News