பா.ஜ.க வில் தலைவர் என்பது பதவி கிடையாது அது ஒரு சேவை : பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை

பாரதிய ஜனதா கட்சியில் தலைவர் என்பது பதவி கிடையாது அது ஒரு சேவை என்று ஈரோட்டில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தொண்டர்கள் மத்தியில் பேச்சு.

Update: 2021-07-14 12:15 GMT

பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத்தின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள அண்ணாமலை  கோவையில் இருந்து சென்னை வரை யாத்திரை மேற்கொண்டு உள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்த அண்ணாமலைக்கு ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஈரோடு பழையபாளையம் அருகில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பாஜகவின்  மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பூரண கும்ப மரியாதையுடன்  வரவேற்பு அளித்தனர்.அதனை தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய பாஜக வின் மாநில தலைவர் அண்ணாமலை, 2026 சட்டமன்ற தேர்தலில் 150 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்குள் நுழைவார்கள்.

தமிழகத்தில் பாஜக வை பொறுத்தவரையில் தலைவன் என்பது பதவி கிடையாது அது ஒரு சேவை. ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள அனைவரையும் ஒன்றிணைப்பு தான் எனக்கு முக்கியம் என்றும் தற்போது எப்படி 4 சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி சட்டமன்றத்திற்குள் சென்றார்களோ அதே போல வரும் தேர்தலில் 150 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு செல்ல நாம் பாடுபட வேண்டும்.தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்பதே விருப்பம் என்று பேசினார்.மேலும் பேசிய அவர்  பாஜகவின் இரும்பு தூண் தொண்டர்கள் தான் என்றும் பேசினார்.



Tags:    

Similar News