சட்ட மேதை அம்பேத்கர் பிறந்த தினம் கொண்டாடப் பட்டது

அம்பேத்கர் படத்திற்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை;

Update: 2021-04-14 12:05 GMT

சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் 130வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஈரோடு மாவட்டத்திலும் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி இன்று கலெக்டர் கதிரவன் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் முருகேசன், கோட்டாட்சியர் சைபுதீன் உள்பட பல்வேறு அதிகாரிகள் உடனிருந்தனர். இதேபோல்

ஈரோடு மூலப்பட்டறையில் உள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி மாநகர் மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு சார்பில் தலைவர் சின்னசாமி தலைமையில் மாநில எஸ்.சி. பிரிவு துணைத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைப்போல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பெருந்துறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு எஸ்.சி. பிரிவு மாவட்ட தலைவி கண்ணம்மா தலைமையில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News