இருக்கு ஆனா இல்லை.....பாதிக்கப்பட்ட மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
இலவச வீட்டுமனை பட்டாவில் குளறுபடி எனக்கூறி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.;
ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பெண்கள்.
ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா ஈரோடு அடுத்த பூந்துறை பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு வழங்கப்பட்டது. இதில் ஒரே சர்வே எண்ணில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு தவறுதலாக அதிகாரிகள் பட்டா வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் பட்டா வழங்கப்பட்ட நபர்களுக்கு உரிய இடத்தையும் ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் பாதிக்கப்பட்ட பெண்கள் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், அதிகாரிகள் செய்த குளறுபடிகளால் பட்டா கிடைத்தும், இடம் ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளதாகவும், பட்டா வழங்கியதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி பயனாளிகளுக்கு இடத்தை ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.