மானாமதுரையில் வக்கீல் தாக்குதல் : ஈரோட்டில் 2 ஆயிரம் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

மானாமதுரையில் வக்கீல் தாக்குதல் காரணமாக ஈரோட்டில் இன்று 2 ஆயிரம் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-07 10:45 GMT

ஈரோடு நீதிமன்ற வளாகம்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வக்கீல் குரு முருகானந்தம் என்பவர் தனது அலுவலகத்தில் இருந்த போது மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார். இந்த சம்பவத்துக்கு வழக்கறிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை கண்டித்தும், வக்கீல்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வலியுறுத்தி ஜெக் கமிட்டி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை ஈரோடு சம்பத் நகர், பவானி, கோபி, சத்தியமங்கலம், கொடுமுடி, பெருந்துறை ஆகிய நீதிமன்றங்களில் உள்ள 2,000 வக்கீல்கள் இன்று ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் வழக்கு சம்பந்தமாக பணிகள் பாதிக்கப்பட்டன.

இது குறித்து ஈரோடு அட்வகேட் அசோசியேசன் சங்க தலைவர் ஜெய கோவிந்தன் கூறியதாவது:-

மானா மதுரையில் வக்கீல் குரு முருகானந்தம் என்பவர் சில சமூக விரோத கும்பலால் கொடூரமான முறையில் வெட்டப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவத்தை கண்டித்தும், வக்கீல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், வக்கீல் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வக்கீல்கள் இன்று ஒருநாள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 2000 வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News