ஈரோட்டிற்கு 150 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வரப்பெற்றன
அவசர தேவைகளுக்காக, ஈரோடு மாவட்டதிற்கென நேற்று, 150 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வரப்பெற்றுள்ளன.;
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாளுக்கு அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா நோய்த்தொற்றும், மரணங்களும் அச்சத்தை ஏற்படுத்திகிறது. கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது.
அந்த வகையில், ஈரோடு மாவட்டதிற்கு அவசர தேவைகளுக்காக, நேற்று 150 ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த ஆக்சிஜன் சிலிண்டர்களை, கொரனோ மருத்துவமனைகள் மட்டுமன்றி தனியார் கல்லூரி, பள்ளிகள், திருமண மண்டபங்கள் என 11 இடங்களில் செயல்பட்டு வரும் தனிமைபடுத்தல் முகாம்களிலும், இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.