கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் அதிமுக வேட்பாளர் ராமலிங்கம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
ஈரோடு மேற்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் கூரப்பாளையம், பிச்சாண்டம்பாளையம் போன்ற பகுதியில் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.அங்குள்ள வாக்காளர்களிடம், வேட்பாளர் ராமலிங்கம் பேசியதாவது: எனது தொகுதி வளர்ச்சி நிதி பாதிக்கும் அதிகமான தொகை, கிராமப்பகுதியின் வளர்ச்சிக்காக செலவிட்டுள்ளேன்.
அதுபோல, ஒவ்வொரு கிராமப்பகுதியிலும் ரேஷன் கடை, அங்கன்வாடி மையம், சத்துணவு மையம், சமுதாய கூடம், குடிநீருக்கான வசதி போன்றவற்றை ஏற்படுத்தி தந்துள்ளேன். வரும் காலங்களிலும் சிறந்த சேவையாற்ற, எனக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டுப்போட்டு வெற்றி பெற செய்யுங்கள்.இவ்வாறு பேசினார்.
பின், கூரப்பாளையம் பகுதியை சேர்ந்த கொ.ம.தே.க.,வினர், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மாநகர மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் மற்றும் வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். அவர்களை வரவேற்று, அவர்களுக்கு அ.தி.மு.க., கரையுடன் கூடிய துண்டு, வேட்டி ஆகியவற்றை ராமலிங்கம் அணிவித்து, அ.தி.மு.க.,வில் சேவையாற்ற அழைப்பு விடுத்தார். இதை தொடர்ந்து, அப்பகுதியில் அவர்களும் இணைந்து இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தனர்.