மில் உரிமையாளரிடம் 50 பவுன் நகை கொள்ளை

Update: 2021-01-16 06:45 GMT

ஈரோட்டில் பிராசஸிங் மில் உரிமையாளர் வீட்டில் சுமார் 50 பவுன் தங்கம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சி பகுதிக்குட்பட்ட காவேரி நகர் 7 வது வீதியில் வசித்து வருபவர் செந்தில் குமார். இவர் பிராசஸிங் மில் ஒன்றினை நடத்தி வருகிறார். இந்நிலையில் பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் வெளியூரில் உள்ள தோட்டத்திற்கு சென்று பொங்கல் விழாவை கொண்டாடியுள்ளனர். இதனையடுத்து இன்று வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பின் பக்கத்திலுள்ள இரும்பு கேட் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டிலுள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த சுமார் 50 பவுன் தங்க நகைகளும் மற்றும் 50ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து வீரப்பன் சத்திரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொள்ளையர்கள் விட்டு சென்ற தடயங்களும் சேகரிக்கப்பட்டன.

Tags:    

Similar News