வாக்களர்கள் விழிப்புணர்வு வாகனம்

வாக்களர்கள் விழிப்புணர்வு வாகனம்

Update: 2021-03-03 06:00 GMT

செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சட்டமன்ற தேர்தல் 2021 வாக்களர்கள் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கதிரவன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த வாகனமானது ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு மாவட்டம் முழுவதும் சென்று பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படங்கள் திரையிடப்பட உள்ளன. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்டத்திலுள்ள அனைத்து தேர்தல் அலுவர்கள் அனைவரும், அனைத்து வாக்குச்சாவடிகள் மையங்களில் தொடர்ந்து ஆய்வு செய்துவருவதாகவும், பறக்கும் படையினர் உட்பட அனைத்து அதிகாரிகளும் சோதனைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதுவரை மாவட்டத்தில் அனுமதியின்றி கொண்டுவரப்பட்ட 120 மதுபாட்டில்கள் பிடிபட்டுள்ளதாகவும் இதுவரை பணம் எதுவும் பிடிக்கவில்லை என்றும் தெரிவித்த அவர் மாவட்டத்தில் தற்போது வரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு மாவட்டத்தில் 81 இடங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் பணியாளய்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரானா தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

Tags:    

Similar News