தேர்தல் பாதுகாப்பு: துணை ராணுவப்படை ஈரோடு வருகை
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, துணை ராணுவப்படை வீரர்கள் ஈரோடு வருகை.;
தமிழக சட்டபேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 5 கம்பெனிகளை சேர்ந்த 500 துணை ராணுவப்படை வீரர்கள் சிறப்பு ரயில் மூலம் ஈரோடு ரயில் நிலையம் வந்தனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் துணை ராணுவப்படை வீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் லக்னோ மாநிலத்தில் இருந்து 5 கம்பெனியை சேர்ந்த 500 துணை ராணுவத்தினர் சிறப்பு ரயில் மூலம் ஈரோடு ரயில் நிலையத்திற்கு இன்று வந்தடைந்தனர்.
ஈரோடு மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 92 துணை ராணுவத்தினரை, கோபிச்செட்டிபாளையம் அடுத்த பாரியூரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீதுமுள்ள துணை ராணுவத்தினர் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்டம், கரூர், அரியலூர் , மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக செல்ல உள்ளனர்.