2வது நாள் போராட்டம்: 50% பஸ்கள் இயக்கம்

நேற்று முதல் நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 70 சதவீத பஸ்கள் இயங்கின. ஆனால் நேற்று மாலையிலிருந்து பெரும்பாலான பஸ்கள் ஓடுவது நிறுத்தப்பட்டன.

Update: 2021-02-26 11:12 GMT

போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தேவையான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். தொழிலாளர்களின் சேமிப்பு பணத்தில் நிர்வாக செலவுகளை தவிர்க்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சிஐடியு, ஏஐடியூசி, ஐஎன்டியூசி உள்ளிட்ட 9 போக்குவரத்துக்கழக சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.

ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை ஈரோடு காசிபாளையம், அந்தியூர், நம்பியூர், பெருந்துறை, சத்தியமங்கலம், தாளவாடி ,பவானி உட்பட 13 பணிமனைகளில் தினமும் 720 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 60 சதவீதம் வெளி மாவட்டங்களுக்கும், 40 சதவீதம் உள் மாவட்டத்திற்குள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் அண்ணா தொழிற்சங்கத்தினர், மற்றும் தற்காலிக ஊழியர்களை கொண்டு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. நேற்று முதல் நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 70 சதவீத பஸ்கள் இயங்கின. ஆனால் நேற்று மாலையிலிருந்து பெரும்பாலான பஸ்கள் ஓடுவது நிறுத்தப்பட்டன. நேற்று மாலை சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று 2-வது நாளாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் வேலை நிறுத்த போராட்டம் நீடித்து வருகிறது. நேற்றை விட இன்று போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக வெளி மாவட்டத்தில் இருந்து ஈரோட்டுக்கு வரும் பஸ்களின் எண்ணிக்கை பாதிக்கு பாதியாக குறைந்துள்ளது. உள்ளூர் குள்ளேயும் சில பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று ஈரோடு மாவட்டத்தில் 50 சதவீத பஸ்கள் இயங்கவில்லை. ஆனால் அதேநேரம் அனைத்து தனியார் பஸ்களும் வழக்கம் போல் இயங்கியதால் தனியார் பஸ்களில் வழக்கத்தைவிட பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதனிடையே சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து தொழிற் சங்கத்தினர் கோரிக்கையினை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News