விசைத்தறி உரிமையாளர்கள் 11 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம்

கடந்த ஒரு மாதத்திற்குள் ரயான் நூல் வகைகளுக்கு கிலோ ஒன்றுக்கு 60 ரூபாய் விலை உயர்ந்ததால், இவர்கள் உற்பத்தி செய்யப்படும் ரயான் துணிகளுக்கு போதிய விலை கிடைக்காமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.;

Update: 2021-02-13 01:32 GMT

ஈரோடு ,சித்தோடு ,லக்காபுரம் போன்ற பகுதிகளில் 30 ஆயிரம் விசைத்தறிகளில் ரயான் துணி வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்திற்குள் ரயான் நூல் வகைகளுக்கு கிலோ ஒன்றுக்கு 60 ரூபாய் விலை உயர்ந்ததால் இவர்கள் உற்பத்தி செய்யப்படும் ரயான் துணிகளுக்கு போதிய விலை கிடைக்காமல் சிரமம் அடைந்து வந்தனர். உற்பத்தி செய்யப்படும் ரயான் துணிகளுக்கு மீட்டர் ஒன்றுக்கு 4 ரூபாய் முதல் 4.50 பைசா வரை நஷ்டம் அடைந்து வந்தனர். எனவே நஷ்டத்தை சமாளிப்பதற்காக இன்று முதல் வருகிற 21-ஆம் தேதி வரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உற்பத்தி நிறுத்தத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த ரயான் துணி உற்பத்தி நிறுத்தத்த்தால் நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி மற்றும் 7 கோடி வரை இழப்பு ஏற்படுவதாகவும் விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News