போக்சோ கைதிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுவனை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்து போக்சோவில் கைதான நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டணை விதித்து மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

Update: 2021-02-04 04:46 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி செங்கோட்டுவேல். இவர் சிறுவயதிலிருந்தே அழகான சிறுவர்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொந்தரவில் ஈடுபடுவது வழக்கமாக கொண்டுள்ளார். விழுப்புரத்தில் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட செங்கோட்டுவேல் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொடுமுடி வந்த செங்கோட்டுவேல் கொடுமுடி ஆற்றில் குளிக்க வந்த 12 வயது சிறுவன் ஒருவனை ராசிபுரம் கடத்தி சென்று மூன்று நாட்கள் அடைத்து வைத்து பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே சிறுவனை காணவில்லை என பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த கொடுமுடி காவல்துறையினர் சிறுவனை தேடிவந்த நிலையில் செங்கோட்டுவேலிடமிருந்து அச்சிறுவனை மீட்டனர்.

பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் செங்கோட்டுவேல் அச்சிறுவனிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து செங்கோட்டுவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கானது ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கினை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி மலாதி விசாரணையின் இறுதியில் செங்கோட்டுவேலுக்கு சிறுவனை கடத்திய குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டணை, பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டணை மற்றும் 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நிவாரணத் தொகையாக 1லட்சம் ரூபாயை தமிழக அரசு பாலியல் தொந்தரவினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து வழங்கவும் பரிந்துரை செய்துள்ளார்.

Tags:    

Similar News