தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் ரகு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அரசின் முரண்பாட்டான கொள்கை முடிவுகளால் பாதிக்கபட்டுள்ள 246 சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி மேம்பாடு வழங்கிட வேணடும் , அரசின் மெத்தனத்தால் 14 ஆண்டுகள் தாமதமாக பணி நியமனம் செய்யபட்ட 750 சுகாதார ஆய்வாளர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்த்திட வேண்டும், கொரானா காலத்தில் பணிபுரிந்த இரணடாம்நிலை சுகாதார ஆய்வாளர் பிரிவினருக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.