ஈரோடு: மாநகராட்சி, 4 நகராட்சி , 42 பேரூராட்சிகளில் வாக்காளர் பட்டியல் வெளியீடு

நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு ஈரோடு மாநகராட்சி 4 நகராட்சி , 42 பேரூராட்சிகளில் வாக்காளர் பட்டியல் வெளியீடு.

Update: 2021-12-10 10:15 GMT

பைல் படம்.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சிகளில், ஆண்கள்-25, பெண்கள்-25, இருபாலர்-605 என 655 ஓட்டுச்சாவடி அமைகிறது. ஆண்கள் 1 லட்சத்து 93 ஆயிரத்து 816, பெண்கள் 2 லட்சத்து 7 ஆயிரத்து 708, திருநங்கைகள் 14 என 4 லட்சத்து ஆயிரத்து, 538 வாக்காளர்கள் உள்ளனர். இவை  அனைத்திலும் சேர்த்து 1,251 ஓட்டுச்சாவடிகளில் 4 லட்சத்து 72 ஆயிரத்து, 213 ஆண்கள், 5 லட்சத்து, 296 பெண்கள், 66 திருநங்கைகள் என 9 லட்சத்து 72 ஆயிரத்து 575 பேர் வாக்களிக்க உள்ளனர்.

ஈரோடு மாநகராட்சி:

மாநகராட்சியில் ஆண்கள் 127, பெண்கள்-127, பொது-189 என 443 ஓட்டுச்சாவடி அமைகிறது. ஆண்கள் 2 லட்சத்து 17 ஆயிரத்து, 364, பெண்கள் 2 லட்சத்து 25 ஆயிரத்து 785, திருநங்கைகள் 42 என 4 லட்சத்து 43 ஆயிரத்து 191 வாக்காளர்கள் உள்ளனர். 

பவானி : 

பவானி நகராட்சியில் ஆண்கள் - 9 , பெண்கள் - 9, இருபாலர்-18 என 36 ஓட்டுச்சாவடி அமைகிறது. 14 ஆயிரத்து 502 ஆண், 15 ஆயிரத்து 780 பெண் என 30 ஆயிரத்து 282 வாக்காளர்கள் உள்ளனர்.

கோபிச்செட்டிப்பாளையம் :

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் ஆண்கள்-29, பெண்கள்-29, இருபாலர்-1 என 59 ஓட்டுச்சாவடி அமைகிறது. ஆண்கள்-22 ஆயிரத்து 522, பெண்கள்-25 ஆயிரத்து, 22, திருநங்கை-1 என 47 ஆயிரத்து 545 வாக்காளர்கள் உள்ளனர்.

புளியம்பட்டி: 

புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் ஆண்கள்-1, பெண்கள்-1, இருபாலர் - 17 என 19 ஓட்டுச்சாவடி அமைகிறது. ஆண்கள்-8 ஆயிரத்து 98, பெண்கள்-8 ஆயிரத்து, 833, இருபாலர்-2 என 16 ஆயிரத்து 933 வாக்காளர்கள் உள்ளனர்.

சத்தியமங்கலம்: 

சத்தியமங்கலம் நகராட்சியில் ஆண்கள்-12, பெண்கள் - 12 , இருபாலர்-15 என 39 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஆண்கள்-15 ஆயிரத்து 911, பெண்கள்-17 ஆயிரத்து, 168, திருநங்கைகள்-7 என 33 ஆயிரத்து, 86 வாக்காளர்கள் உள்ளனர்.

Tags:    

Similar News