ஈரோடு வ.உ.சி. பூங்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

ஈரோடு வ.உ.சி. பூங்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் நபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2025-03-22 01:10 GMT

கைது செய்யப்பட்ட தியாகராஜன்.

ஈரோடு வ.உ.சி. பூங்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் நபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், வ.உ.சி. பூங்கா பின்புறம், 25வது கேட் அருகில் வெடிகுண்டு உள்ளது. சில மணி நேரத்தில் வெடிக்க உள்ளது எனக்கூறி உடனே அழைப்பு துண்டித்துள்ளார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கருங்கல்பாளையம் போலீசார், வெடிகுண்டு கண்டறிதல் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு, சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.

அதன் பின்னர், நடத்திய விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர், திருச்சியை சேர்ந்த தியாகராஜன் என்பதும், அவர் ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் சோப்பு கம்பெனியில் 2 மாதங்கள் பணியாற்றியதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர் வேலை பார்த்த சோப்பு கம்பெனிக்கு சென்ற போலீசார் தியாகராஜன் குறித்து விசாரணை நடத்தினர். ஆனால் அவர் குறித்து வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை என கூறினர்.

இந்நிலையில், ஈரோடு மூலப்பட்டறையில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தியாகராஜனை கைது செய்தனர்.

Similar News