ஈரோடு: ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மதிப்பு ஊதியம் உயர்வு
ஈரோடு மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மதிப்பு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்.
ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கிராம ஊராட்சி தலைவர்கள் ஊராட்சியின் நிர்வாக அலுவலர்கள் என்கிற முறையில் கிராம ஊராட்சியில் நடைபெறும் மாநில அரசுத் திட்டங்கள் மற்றும் ஒன்றிய அரசுத் திட்டங்கள் ஆகியவற்றை முழுமையாக செயல்படுத்திடும் முக்கியப் பொறுப்பில் உள்ளனர்.
அத்தியாவசியப் பணிகளான குடிநீர் வழங்குதல், தெரு விளக்கு அமைத்துப் பராமரித்தல், சாலை வசதி அமைத்தல், சுகாதாரப் பணிகள் மேம்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டு வருவதாலும், அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு மாதாந்திர மதிப்பு ஊதியம் ரூ.1,000 ல் இருந்து ரூ.2, 000 ஆக உயர்த்தி அரசாணை நிலை எண்: 132 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.