நடப்பாண்டில் ஈரோட்டில் இன்று முதல்முறையாக 101.84 டிகிரி பரான்ஹீட் வெயில் பதிவு

நடப்பாண்டில் ஈரோட்டில் முதல்முறையாக இன்று (5ம் தேதி) 101.84 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.;

Update: 2025-03-05 14:00 GMT

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயிலின் அளவு சதத்தை தொட்ட நிலையில் ஈரோடு பகுதியிலும் கடந்த சில நாட்களாக வெயிலின் அளவு 97 டிகிரி முதல் 100 டிகிரி வரையில் பதிவாகி இருந்தது.

கடந்த சில நாட்களாக வெயிலின் கொடுமை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வாடி, வதங்கி வருகின்றனர். இந்த நிலையில், இன்றும் (மார்ச் 5ம் தேதி) வழக்கம்போல் காலை முதலே ஈரோடு மாநகரில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கி 100 டிகிரியையும் கடந்து 101.84 டிகிரியாக பதிவானது.

இதனால், சாலைகளில் அனல் காற்று வீசியதால் வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர். மேலும், சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் குடைபிடித்தபடியும், முகத்தில் துணிகளை கட்டிக்கொண்டும் பள்ளி- கல்லூரி மாணவிகள், பெண்கள் துப்பட்டா மற்றும் புடவையால் தலையில் போர்த்தியபடியும் சென்றதை காண முடிந்தது.

Similar News