ஈரோடு: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வைராபாளையம் பகுதியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை.;
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வைராபாளையம், ராஜகணபதி வீதியைச் சேர்ந்தவர் கோபிநாத். இவரது மனைவி கோகிலா (வயது 22). இவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று இரவு கணவன்- மனைவி இருவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். நள்ளிரவு 2.45 மணி அளவில் கோபிநாத் திடீரென எழுந்து பார்த்தபோது மனைவி கோகிலா தூக்குப்போட்டு தற்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து, கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கோகிலா என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துக் கொண்டார்? என தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி ஒன்றரை வருடமே ஆவதால் இதுகுறித்து ஆர்.டி.ஒ.விசாரணையும் நடைபெறுகிறது.