சுற்றுலாத்துறையை மேம்படுத்த தனி நிதி: அமைச்சர் மதிவேந்தன்

சுற்றுலாத்துறையை மேம்படுத்த தனி நிதி ஒதுக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேட்டியளித்துள்ளார்.;

Update: 2021-12-28 16:30 GMT

அமைச்சர் மதிவேந்தன் மற்றும் முத்துசாமி.

சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின் 253வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் மொடகுறிச்சியில் வைக்கப்பட்டு இருந்த திருவுருவ படத்திற்கு தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி , தமிழக சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சுற்றுலாவுக்கு என தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், புதிய புதிய சுற்றுலா தளங்கள் கண்டறியப்பட்டு சுற்றுலா மேம்படுத்தப்படும். மேலும், சுற்றுலாத்துறையின் தமிழ்நாடு ஓட்டல்களை லீசுக்கு தராமல் அரசே நடத்த ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News