ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 134.6 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-05-08 02:30 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர், பர்கூர்,  அத்தாணி, ஆப்பக்கூடல், வேம்பத்தி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 7.30 மணிக்கு சூறாவளிக்காற்று வீசியது. இதைத்தொடர்ந்து 8 மணி முதல் 8.30 மணி வரை இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்தது. சூறாவளிக்காற்று காரணமாக அந்தியூர் பகுதியில் மின்சாரம் தடைபட்டது.இதேபோல், சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 8.30 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன் மழையும் பெய்தது. பலத்த காற்று வீசியதால் மின்தடையும் ஏற்பட்டிருந்தது. இதனால் சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதி இருளில் மூழ்கியது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று (07.05.2022) பெய்த மழையின் அளவு விவரம் பின்வருமாறு:-  

ஈரோடு - 15.0 மி.மீ 

பெருந்துறை - 2.0 மி.மீ 

தாளவாடி - 6.0 மி.மீ 

சத்தியமங்கலம் - 4.0 மி.மீ 

பவானிசாகர் - 34.6 மி.மீ 

பவானி - 5.4 மி.மீ 

சென்னிமலை - 42.0 மி.மீ 

கவுந்தப்பாடி - 1.6 மி.மீ 

அம்மாபேட்டை - 7.0 மி.மீ 

வரட்டுப்பள்ளம் - 17.0 மி.மீ 

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 134.6 மி.மீ‌ 

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 7.9 மி.மீ .

Tags:    

Similar News