ஈரோடு: ரெயில்வே டிரைவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஈரோடு ரெயில்வே டிரைவர்கள் உண்ணாவிரதபப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-07 09:45 GMT

ஈரோடு ரெயில் நிலையம்,  அருகே இன்று அகில இந்திய ரெயில் ஒட்டுனர்கள் சங்கம் சார்பில் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் டிரைவர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரத போராட்டத்திற்கு சேலம் கோட்ட தலைவர் சந்திரமனோகர் தலைமை தாங்கினார். தென் மண்டல துணைச் செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

ரெயில் நிர்வாகத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். வேலை நேரத்தை 12 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக குறைக்க வேண்டும். இரவு பணியின் படியை உச்ச வரம்பின்றி வழங்க வேண்டும். பெண் ரெயில் ஓட்டுனர்களுக்கு உரிய வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.  காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.  பணிமாறுதல் பதிவிற்கு 5 வருடம் என்ற தடையை நீக்க வேண்டும் உள்பட 17 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான ரெயில் டிரைவர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News