ஈரோடு: கொரோனா காலத்தில் பணியாற்றிய தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி மனு
ஈரோட்டில் கொரோனா காலத்தில் பணியாற்றிய தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.;
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா காலத்தில் லேப் டெக்னீசியன் மற்றும் டேட்டா என்ட்ரி பணிகளுக்காக தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டார். இவ்வாறாக, மாவட்டம் முழுவதும் 82 பேர் பணியாற்றி வந்துள்ளார். இந்த ஊழியர்கள் பணியிலிருந்து விடுவித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இது தொடர்பான 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.