ஈரோடு வெங்காயம் மற்றும் பழங்கள் மொத்த வணிகர்கள் சங்கம் தொடக்க விழா

ஈரோடு வெங்காயம் மற்றும் பழங்கள் மொத்த வணிகர்கள் சங்கம் தொடக்க விழா ஈரோட்டில் நேற்று நடைபெற்றது.;

Update: 2025-03-23 06:10 GMT

ஈரோடு வெங்காயம் மற்றும் பழங்கள் மொத்த வணிகர்கள் சங்கம் தொடக்க விழா ஈரோட்டில் நேற்று நடைபெற்றது.

ஈரோடு வெங்காயம் மற்றும் பழங்கள் மொத்த வணிகர்கள் சங்கம் தொடக்க விழா ஈரோடு வீரபத்ரா 3வது வீதியில் உள்ள ரத்னா ரெசிடென்சியில் நடைபெற்றது. விழாவில், சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டார்.


இவ்விழா, சங்க தலைவர் பி.கே.தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ஆர்.கே.எஸ்.தமிழரசன் வரவேற்புரை ஆற்றினார். விழாவில், சங்கத்தின் துணை தலைவர்கள் கே.ஏ.சாந்து முஹமது, குட்டி (எ) எம்.செந்தில்குமார், துணை செயலாளர்கள் எம்.அருள் ஜோதி, ஏ.எம்.இதாயத்துல்லா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில், மாநில துணை தலைவர் டி.திருமூர்த்தி, ஈரோடு மாவட்ட தலைவர் இரா.க.சண்முகவேல், ஈரோடு மாவட்ட செயலாளர் பொ.இராமச்சந்திரன், ஈரோடு மாவட்டப் பொருளாளர் உதயம் பி.செல்வம், ஈரோடு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ.லாரன்ஸ் ரமேஷ், ஈரோடு மாவட்ட செய்தி தொடர்பாளர் ஏ.ஆர்.சாதிக் பாட்சா, மாநகரச் செயலாளர் கே.பாலமுருகன், மாநகரப் பொருளாளர் ஜி.கமலஹாசன், ஈரோடு நேதாஜி தினசரி மார்கெட் கனி வணிகர்கள் சங்கத்தலைவர் டி.என்.சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் சங்க பொருளாளர் என்.உதயகுமார் நன்றி கூறினார்.

Similar News