ஈரோடு பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா கோலாகல துவக்கம்..!
ஈரோடு பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா கோலாகல துவக்கம்.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;
ஈரோடு, கோட்டை, சின்னபாவடி பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா நேற்று காலை கணபதி ஹோமம், கொடியேற்றத்துடன் துவங்கியது.
பூஜை விபரங்கள்
இன்றிரவு பூச்சாட்டுதல் நடக்கிறது. நாளை காலை காவிரிக்கு சென்று தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது.
தேதி நிகழ்வு
♦ 23 குண்டம் பற்ற வைத்தல்
♦ 24 காலை குண்டம் இறங்குதல், பொங்கல், மாவிளக்கு ஊர்வலம்
மாலை நிகழ்ச்சிகள்
24ம் தேதி மாலையில் சுவாமி வீதி உலா நடக்கிறது.
மறுபூசை தேதி
26ல் மறுபூஜை நடக்கிறது.
பக்தர்களுக்கு அறிவுறுத்தல்
♦ குண்டம் இறங்கும் பக்தர்கள் மஞ்சள் நிற பருத்தி ஆடை அணிய வேண்டும்
♦ விரதம் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது