அனுமதியின்றி தேர்தல் பிரசாரம்: நா.த.க. வினர் 8 பேருக்கு வழக்கு..!

அனுமதியின்றி தேர்தல் பிரசாரம்: நா.த.க. வினர் 8 பேருக்கு வழக்கு.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;

Update: 2025-01-18 06:59 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீதாலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியினர் வாக்காளர்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

காணும் பொங்கல் விழா

ஈரோடு வ.உ.சி., பூங்காவில் நேற்று முன்தினம் காணும் பொங்கல் விழா நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். அப்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மூன்று பேர் முதுகில் போர்டு கட்டி, சீதாலட்சுமிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். அந்த போர்டில் சீதாலட்சுமி போட்டோ, அவருக்கு ஓட்டளிக்கும்படி வாசகம் இருந்தது.

தேர்தல் பறக்கும் படையினரிடம் புகார்


அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர், பிரசாரம் செய்ய அனுமதி பெற்றுள்ளீர்களா என கேட்டபோது, அனுமதி பெறாதது தெரிய வந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் கொடுத்த புகாரின்படி, அனுமதி இன்றி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக மூன்று பேர் மீதும், கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வீரப்பன்சத்திரத்திலும் வழக்கு

இதேபோல் வீரப்பன்சத்திரம் பகுதியிலும், அனுமதியின்றி பிர-சாரத்தில் ஈடுபட்டதாக, நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் நவநீதகிருஷ்ணன் உட்பட ஐந்து பேர் மீதும் வழக்குப்பதிவு செய்-யப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News