இரும்பு தடுப்புகளில் விளம்பரம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை..!
இரும்பு தடுப்புகளில் விளம்பரம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;
சென்னிமலை, ஜன.17:
போலீசார் வைத்துள்ள இரும்பு தடுப்புகளில் விளம்பரம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து ஒழுங்குபடுத்த இரும்புத் தடுப்புகள்
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் இரும்புத் தடுப்புகள் வைத்துள்ளனர்.
விளம்பரம் செய்வோர் மீது நடவடிக்கை
அதில் பல நிறுவனத்தினர் மற்றும் தனி நபர்கள் தங்களது தொழில், வியாபாரம் சம்பந்தமான விளம்பர பலகைகள், பேனர்களை கட்டுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் பெருந்துறை போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார், சென்னிமலை குமரன் சதுக்கம், ஊத்துக்குளி ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்த இரும்பு தடுப்புகளில் கட்டப்பட்டிருந்த விளம்பர பலகைகள் மற்றும் பேனர்களை அகற்றினர்.
விளம்பரம் செய்தால் அபராதம்
மேலும், விளம்பர பலகைகள் வைத்திருந்த நபர்களை போன் மூலமாகத் தொடர்பு கொண்டு போலீசார் வைத்துள்ள இரும்புத் தடும்புகளில் விளம்பர பலகைகள் வைத்தால் அபராதம் விதிக்கப்படும் என கடுமையாக எச்சரிக்கையும் விடுத்தனர்.
மலை கோயிலுக்கு செல்ல வேண்டிய வழிகள்
தவிர, சென்னிமலை, குமரன் சதுக்கம் பகுதியில் இருந்து கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மலை கோயிலுக்கு செல்பவர்கள், வடக்கு ராஜ வீதி, கிழக்கு ராஜ வீதி வழியாக செல்ல வேண்டும் என்றும், போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் மேற்கு ராஜ வீதி வழியாகச் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தினர்.
இரும்பு தடுப்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள்
மேலும், சாலைகளில் வைக்கப்ப்ட்டுள்ள இரும்பு தடுப்புகளில், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் ஒளிரும் ஸ்டிக்கர்களையும் பொருத்தினர்.