ஈரோடு: சாலையில் தவற விட்ட ரூ.40 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த இருவருக்கு பாராட்டு

Erode District News -ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் சாலையில் தவற விட்ட ரூ.40 ஆயிரத்தை, போலீசில் ஒப்படைத்த இருவருக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

Update: 2022-10-28 04:15 GMT

Erode news, Erode news today -காவல் நிலையத்தில் 40 ஆயிரம் ரூபாயை ஒப்படைத்த இருவருக்கும், சத்தியமங்கலம் ஏஎஸ்பி ஐமன் ஜமால் சால்வை அணிவித்து பாராட்டினார்.

Erode District News    -சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே, சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ. 40 ஆயிரம் பணத்தை காவல்துறை உதவியுடன் உரியவரிடம் ஒப்படைத்த இருவருக்கும், பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அகதிகள் முகாமை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 55).  இவர் தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக, நேற்று காலை சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே நடத்து செல்லும் போது, சாலையில் ரூபாய் 500 நோட்டுகள் கத்தையாக பணம் கிடப்பதை பார்த்துள்ளார். அப்போது அங்கு வந்த பவானிசாகர் தொட்டம்பாளையத்தை சேர்ந்த ஷோரூம் ஊழியர் கோகுல் (வயது 21) என்ற இளைஞரும் கீழே கிடந்த பணத்தை பார்த்துள்ளார். இதனையடுத்து ராஜேஸ்வரி, கோகுல் ஆகிய இருவரும் கீழே கிடந்த பணத்தை எடுத்து அக்கம் பக்கத்தில், யாராவது பணத்தை தேடி வருகின்றார்களா என்று பார்த்தபோது பணத்தை தேடி யாரும் வரவில்லை. இதனையடுத்து ராஜேஸ்வரி, கோகுல் இருவரும் பணத்தை காவல்துறையினரிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர்.


தனையடுத்து, சத்திியமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்த போக்குவரத்து காவல் நிலையத்தை அணுகியுள்ளனர். இதனையடுத்து, பணம் கிடைத்த தகவலறிந்து அங்கு வந்த சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் கீழே கிடந்த பணத்தை ஒப்படைத்த ராஜேஸ்வரி, கோகுல் ஆகியோரிடம் விசாரணை நடத்திய பின்,   கேட்பாரற்று கிடந்த பணம் குறித்து பொதுமக்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அறிவிப்பு வெளியிட உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து வாட்ஸ் ஆப்பில் வந்த செய்தியை அறிந்த குணசிங் என்பவர், காவல்துறையினரை தொடர்பு கொண்டு தனது நண்பர் ஜோஸ்வா (61) என்பவருக்கு கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது மகளின் பிரசவ செலவிற்காக ரூபாய் 40 ஆயிரம் பணத்தை கொடுத்தனுப்பியதாகவும், அந்த பணத்தை ஜோஸ்வா, சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் தவற விட்டதாகவும் தெரிவித்தார்.


இதனையடுத்து சத்தியமங்கலம் காவல்துறையினர் ஜோஸ்வா மற்றும் குணசிங் ஆகியோரை நேரில் விசாரித்த பின் பணம் கொடுத்தபோது பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, கீழே கிடந்த பணம் ஜோஸ்வாவிற்கு சொந்தமானது என்பதை உறுதியானது.இதனையடுத்து சத்தியமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள ஐமல் ஜமால் ஐபிஎஸ், பணத்தை கண்டெடுத்து ஒப்படைத்த ராஜேஸ்வரி மற்றும் கோகுல் ஆகிய இருவரின் நேர்மையை பாராட்டி பொன்னாடை அணிவித்து பாராட்டுதல்களை தெரிவித்தார். பின்னர்,  பணத்தை தவறவிட்ட ஜோஸ்வாவிடம் 40 ஆயிரத்தை ஒப்படைத்தார். இதற்கிடையில், சாலையில் கிடந்த பணத்தை தாங்களே வைத்துக்கொள்ளாமல், நேர்மையான முறையில் காவல்துறையிடம் ராஜேஸ்வரிக்கும், கோகுலுக்கும் ஆகிய இருவரும் ஒப்படைத்த சம்பவம் சத்தியமங்கலம் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News